Advertisement

திரிபுராவில் பிப்ரவரி 18ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்

திரிபுராவில் பிப்ரவரி 18ஆம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் திரிபுராவில் பிப்ரவரி 18ஆம் தேதியும், மேகாலயா, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் மூன்றாம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர்கள் தெரிவித்தனர். 3 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன