திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவைக்கு சென்று கையெழுத்திட்ட நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, சபாநாயகரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கேள்வி நேரம் முடிந்ததும் சட்டப்பேரவையில் இதை சபாநாயகர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்ததால், திமுக கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன