திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி

நடிகர் கமல்ஹாசனை எச்சரிக்கும் வகையில் பேசிய அமைச்சர்களை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து கமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களிடையே எதிர்ப்பு கிளம்ப, கமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தனர். இதற்கு தனது அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், வாக்களித்த யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்ய உரிமையுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

தமக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டிருந்த இந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள கமல், அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றியை தவிர வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். தம் ஆதங்கங்களில் பல மு.க.ஸ்டாலினின் கோபச் செய்தியிலும் இருப்பது ஆறுதல் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். ஒரு தலைவன் இருக்கிறான் என்பதை உணர மறுப்பவர்கள் தலைவர்களாக நீடிப்பது ஜனநாயகத்தில் பலிக்காது எனவும் தனது டிவிட்டர் பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!