Advertisement

திமுகவையோ அதிமுகவையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பது தமது நோக்கமல்ல – திருநாவுக்கரசர்.

அதிமுகவுக்கு தாம் ஜால்ரா அடிப்பதாக சிலர் கூறுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, குமரிஅனந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த செயற்குழு கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரம், உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன