Advertisement

தினமலர் நாளிதழின் பங்குதாரர் ராகவன் படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி

திருச்சியில் மறைந்த தினமலர் நாளிதழின் பங்குதாரர் ராகவன் படத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வந்த தினமலர் நாளிதழின் பங்குதாரரான ராகவன், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காலமானார்.

இன்று விமானம் மூலம் திருச்சி சென்ற ஸ்டாலின் ராகவன் இல்லம் சென்று, அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன