Advertisement

திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து – டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி காயம்

திண்டுக்கல் அருகே மேம்பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரனின் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளருமான புகழேந்தி, தனது காரில் ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காரை மேத்யூ என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலம் அருகே வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த புகழேந்திக்கு காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தோர் அவரை மீட்டு திண்டுக்கல் எஸ்.எஸ். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன