Advertisement

திண்டுக்கலில் கட்டண உயர்வைக் கண்டித்துப் பேருந்துகள் சிறைபிடிப்பு

திண்டுக்கல் அருகே வெள்ளோடு கல்லுப்பட்டியில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பேருந்துகளைச் சிறைப்பிடித்துப் பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் வெள்ளோடு சாலை கல்லுப்பட்டியில் அரசு மற்றும் தனியார் பேருந்தைப் பொதுமக்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் சிறைப்பிடித்தனர். வெள்ளோட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு 5 ரூபாயாக இருந்த கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைவான கூலி பெறும் தங்களால் அதிகக் கட்டணம் கொடுக்க முடியவில்லை எனக் கூலித் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன