Advertisement
Advertisement

“தாய், தாய்மொழி, தமிழகம், இந்தியாவை தமிழர்கள் மறக்கக்கூடாது”- வெங்கையா நாயுடு

தாய், தாய்மொழி, தமிழகம், இந்தியா நான்கையும் தமிழர்கள் மறக்கக்கூடாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், அம்மாவை மறக்கக்கூடாது என்றார்.

அம்மா என்றால் ஜெயலலிதாவை கூறவில்லை என்று தெரிவித்த அவர், ஜெயலலிதாவும் இவ்வுலகில் இல்லை, தானும் அரசியலில் இல்லை என்றார். தான் அரசியலில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பெற்றோர்கள், நண்பர்கள் , உறவினர்கள் என அனைவரிடமும் தமிழிலேயே பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பழமையும், பெருமையும் வாய்ந்த தமிழ் மொழியில் பேசமுடியாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன