தாய், குழந்தை கொலை வழக்கு – மொய் விருந்துக்காக கொலை செய்த கொடூர காதலன் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெண்ணையும், கைக்குழந்தையையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் கணபதி. இவர் தனது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் பேராவூரணி கே.கே நகர் பகுதியை சேர்ந்த தனலட்சுமியை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது. முதல் மனைவிக்கு அண்மையில் குழந்தை பிறந்ததால் கணபதி முதல் மனைவி வீட்டிலேயே தங்கி இருந்தார்.

கணவர் இல்லாமல் வீட்டில் தனிமையில் வசித்துவந்த நிலையில் சம்பவத்தன்று தனலட்சுமியையும் குழந்தையையும் கொலை செய்த மர்ம நபர், வீட்டில் இருந்த 25 சவரன் நகைகள், செல்போன்கள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டான். தனலெட்சுமியின் செல்போன் தொடர்புகளை வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கான மர்மம் விலகியது.

தனலட்சுமியின் செல்போன் திருடப்பட்டிருந்ததால் கொலையாளி தொடர்பான விவரம் ஏதும் செல்போனில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தது காவல்துறை. அப்போது சம்பவத்தன்று இரவு கடைசியாக தனலட்சுமி வேலம்பட்டியை சேர்ந்த ஜெயவேல் என்பவரிடம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிமையில் தவித்த தனலட்சுமிக்கும் , ஜெயவேலுவுக்கும் அண்மையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் காதலானதால், கணவர் கணபதி இல்லாத நாட்களில் தனலெட்சுமியை சந்திப்பதை ஜெயவேல் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் வீட்டு மொய் விருந்துக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் ஜெயவேலு.

அப்போது செல்போனில் தனலட்சுமி அழைக்கவே அங்கு சென்று தனலெட்சுமியுடன் தனிமையில் இருந்த ஜெயவேல் மொய் விருந்துக்கு பணம் கேட்டுள்ளான். தனலட்சுமி கொடுக்க மறுத்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.அப்போது அழுதபடியே குழந்தை விழித்துக்கொண்டதால் குழந்தை என்றும் பாராமல் தலையணையால் அழுத்தி குழந்தையையும் கொன்றுள்ளான் கொடூரன் ஜெயவேல்..!

பின்னர் தனலட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலி, வீட்டின் பீரோவில் இருந்து நகை வெள்ளி பொருட்களையும், போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தனலெட்சுமியின் 3 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு தலைமறைவான ஜெயவேல், செல்போன் தொடர்பு மூலமே போலீசில் சிக்கிக்கொண்டான் என்கின்றனர் காவல்துறையினர்.

கணவரை ஏமாற்றி , திடீர் பழக்கமான இளைஞருடன் ஏற்பட்ட தவறான உடல் சார்ந்த தேடல் பரிதாபமாக இரு உயிரை காவு வாங்கியதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன