Advertisement
Advertisement

தாடி பாலாஜியால் தற்கொலை முடிவை எடுக்கும் சூழ்நிலை – நித்யா

தனது கணவரும் நடிகருமான தாடி பாலாஜி தன்னைப் பற்றிக் கூறிவரும் அவதூறுகளால் குழந்தைகளுடன் தற்கொலை முடிவை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

தாடி பாலாஜி கொடுமைப்படுத்துவதாகக் கூறி நித்யா பிரிந்து வாழும் நிலையில் அவருக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக தாடி பாலாஜி கூறிவருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நித்யா, கணவர் பாலாஜி தனது திரையுலக மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தனது தவறுகளை மறைக்கவே அவதூறுகளை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

தனது பெயரில் இருக்கும் வீடு ராசியானது என்று தாடி பாலாஜி கருதுவதாலேயே மீண்டும் தன்னுடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நித்யா கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன