தலையாறு நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு – ரம்மியமான காட்சியை காண சுற்றுலாப்பயணிகள் வருகை

கொடைக்கானல் தலையாறு நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால், காண்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 820 மீட்டர் உயரத்தில் உருவாகும் இந்த நீர் வீழ்ச்சி, இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக உள்ளது. தலையாறு நீர்வீழ்ச்சியின் மொத்த நீரும் மஞ்சளார் அணையில் சென்று சேருகிறது.

தற்போது கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால், தலையாறு நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு மலை உச்சியில் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சி காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. வத்தலகுண்டு கொடைக்கானல் வரும் வழியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் பயண களைப்பை நீக்குவதற்காக ரம்மியமான இந்தக் காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன