Advertisement

தருமபுரியில் காணும் பொங்கலுக்கு மறுநாள் நடைபெறும் பாரம்பரிய முயல்விடும் திருவிழா

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாரம்பரிய முயல் விடும் திருவிழா நடைபெற்றது. குடுமியான்பட்டியில் காணும் பொங்கலுக்கு மறுநாள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள், அருகிலுள்ள வனப்பகுதிக்குச் சென்று வலை வைத்து முயல்களை பிடித்து வருகின்றனர். பின்னர் மாரியம்மன், வேடியப்பன் சுவாமிகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்து பூஜைகள் செய்தபின் அவற்றை வயல் பகுதிகளில் விடுகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன