தயாரிப்பாளர் குல்சன் குமார் கொலை வழக்கில் தேடப்படும் நதீம்கான், தாவூத்தால் தாம் பாதுகாக்கப்படுவதாக வந்த செய்திக்கு மறுப்பு

இந்திப்படத் தயாரிப்பாளர் குல்சன் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் இரட்டை இசையமைப்பாளர்கள் நதீம் -ஷரவன் ஜோடியைச் சேர்ந்த நதீம் கான் இங்கிலாந்தில் தாவூத் இப்ராகிமால் பாதுகாக்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இசையமைப்பாளர் நதீம் மறுத்துள்ளார். தாம் தாவூத்தின் குரலைக் கூட கேட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.குல்சன் குமார் தயாரித்த AASHIQUEE படத்தில் நதீம் -ஷரவன் இசையமைத்த பாடல்கள் சக்கை போடு போட்டன.

துபாயில் தாம் தொழில் செய்து வருவதாகவும் தம் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட சட்டரீதியாக போராடி வருவதாகவும் மீண்டும் இந்தியா வந்து திரைப்படங்களுக்கு இசையமைக்க விரும்புகவதாகவும் நதீம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன