தம்பதியினரை கட்டிபோட்டு, 16 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தம்பதியினரை கட்டிபோட்டு, 16 சவரண் தங்க நகைகள், மற்றும் 1 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராசிபுரத்தை அடுத்த வடுகம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரான தனது மனைவி ஜெயலட்சுமியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலையில் தம்பதியினர் இருவரும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், முத்துசாமி மற்றும் ஜெயலட்சுமியை தாக்கி கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 16 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகமுடிக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன