Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விதிகள் மீதான இந்திய பார் கவுன்சில் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விதிகள் மீதான பரிசீலனையை தள்ளிவைத்து இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள், 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை நிறைவேற்றி இந்திய பார் கவுன்சில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 4ஆம் தேதி இதன் மீதான பரிசீலனையை தள்ளிவைத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், சதீஷ்குமார் அமர்வு, இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு மார்ச் ஒன்றாம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன