தமிழக , சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகள் தேர்தல் நிறைவு

தமிழக சாரணர் சாரணியர் இயக்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.

சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 2 மணி வரை நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா, பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி ஆகிய இருவருக்குடையே போட்டி நிலவுகிறது. துணைத்தலைவர் பதவிக்கு லெட்சுமி,கஸ்தூரி,மஞ்சுளா ஆகிய 3 பெண்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 துணைத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவுகிறது. மாலைக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். வாக்குப்பதிவின் போது தேர்தலை நிறுத்துவதற்கான தடை ஆணையுடன் கே.எல்.ரமேஷ் என்பவர் அணுகிய நிலையில், தடையாணை எதுவும் தனக்கு வரவில்லை என தேர்தல் அலுவலர் கூறியதால் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன