தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் காலை பத்து மணிக்கு வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், முதல் நபராக முதலமைச்சர் பழனிச்சாமி தமது வாக்கினைப் பதிவு செய்தார்.
முதலமைச்சரைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் தமது வாக்கினைப் பதிவு செய்தார். இதனைத் தொடந்து அமைச்சர்களும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிறப்பு அனுமதி பெற்று தமிழக சட்டப்பேரவையிலேயே தமது வாக்கினைப் பதிவு செய்தார். சட்டப்பேரவை வளாகத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏக்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரள எம்.எல்.ஏ அப்துல்லா சிறப்பு அனுமதி பெற்று தமிழகத்தில் வாக்களித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன