தமிழக அளவில் சப் – ஜூனியர்களுக்கான ஜூடோ போட்டி

தமிழக அளவில் நடைபெற்ற சப் ஜூனியர்களுக்கான ஜூடோ போட்டியில் கரூர் அணி முதலிடம் பிடித்தது. சென்னை வியாசர்பாடியில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் இருந்து 315 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் ஒட்டுமொத்தமாக கரூர் அணி முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தை சென்னை அணி கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் கரூர் அணி, சப்- ஜூனியர்களுக்கான ஜூடோ போட்டியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. வழக்கமாக உள்விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் ஜூடோ போட்டி, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன