தமிழக அரசு நிர்வாகத்திலோ அதிமுக உள்கட்சி விவகாரத்திலோ மத்திய அரசு தலையிடவில்லை – ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்றும், எப்போதும் தலையிடாது என்றும், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற விழா நிகழ்வுகளுக்குப் பின்னர், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவிடத்திலும், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எந்த மாநிலங்களின் விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடாதது போன்று, தமிழக அரசின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *