Advertisement

தமிழக அரசின் அரசாணையை ரத்துச் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435 பிரிவின் கீழ் வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யமட்டோம் என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், நளினி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161-ன் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாக கூறியுள்ளார்.

இதன்படியே தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தபோதிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 ன் படி சிபிஐ விசாரணையின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டும் விடுதலை செய்ய முடியாது எனக் கூறுவது தவறு என்றும் நளினி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன