Advertisement

தமிழக அமைச்சர்கள் பிரதமர் மோடி கையில் பொம்மையாக உள்ளனர் – திருநாவுக்கரசர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் விலக பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில், இந்திரா காந்நி நூற்றாண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி பின் வாசல் வழியாக தமிழகத்தில் நுழைய முயற்சிப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் கையில் பொம்மையாக உள்ளதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன