Advertisement
Advertisement

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள் சிலவற்றை தற்போது காணலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற 1008 சங்காபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட சாமி கோயிலில் புரட்டாசி மாத திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் வாகனத்தில் அய்யா உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் உள்ள நித்தியக் கல்யாணி சமேத நித்தீஸ்வரர் ஆலய கால பைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்தில், திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன