தமிழகம், புதுவையில் மழை, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வாணியம்பாடி, ஒசூரில் தலா 7 சென்டிமீட்டரும் உடுமலைப்பேட்டை, போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி மற்றும் வால்பாறையில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன