தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்த இரு தினங்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி அதே இடத்தில் நிலவுவதாகக் கூறினார்.

ஆனால் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த இரு தினங்களில் தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன