தமிழகத்தில் ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது – விக்கிரமராஜா

தமிழக அரசின் ஸ்திரமற்ற தன்மையால் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியிருக்கிறார். நெல்லையில் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் இதுவரை 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இதுபற்றி வரும் 18, 19 ஆகிய தேதிகளில் சூரத் நகரில் நடைபெறும் அகில இந்திய வணிகர்கள் மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன