Advertisement

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி மற்றும் சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் தை அம்மாவாசையை முன்னிட்டு சந்திரசேகரர் மற்றும் ருணவிமோசகருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைரவேலுடன் வெள்ளிரதத்தில் வீதியுலா வந்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் மனமுருக தரிசித்தனர்.

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களில் 10 ஆயிரத்து 8 விளக்குகள் ஏற்றப்பட்டன.திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட அபிஷேக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் தை அம்மாவாசையை முன்னிட்டு 10ஆயிரத்து 8 விளக்கு பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஏரிக்கரையில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலய சர்வமங்கள காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பெருமாள் கோவிலில் வாழைப்பழம் சூறை விடும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உத்திராட நட்சத்திரத்தை ஒட்டி நடைபெற்ற தங்கரத உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்லில் கிழக்கு மாரம்பாடியில் பெரிய அந்தோணியார் ஆலயத்தின் 129வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன