Advertisement

தமிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது – பிரகாஷ் ஜவடேகர்

தமிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் மாணவர்கள் திறன் மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தில் நவோதயப் பள்ளிகள் இல்லாதது துரதிருஷ்டமானது எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் முன்னேற்றத்துப் பிரதமர் நரேந்திர மோடி நான்கு வகையான கல்வி முறைகளை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாரதிய வித்யா பவன் பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வியின் மீது அதிக அக்கறை செலுத்துவதால் அந்தப் பள்ளிகளில் கல்வி மேம்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன