தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர். மழை காரணமாக 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
தேனி மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் குளுமையான சூழலை அனுபவித்தனர். கடந்த சில நாட்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிம்மதியை அளித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன