Advertisement

தமக்கு எதிராகப் போராடியவர்களை நாய்கள் என விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் அனந்த் குமார்

தமக்கு எதிராகப் போராடியவர்களை நாய்கள் என விமர்சித்து, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மதச்சார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது என்று அவர் ஏற்கெனவே பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது, ஒரு தரப்பினர் அவரது காரை மறித்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மக்களின் நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தார். குரைக்கின்ற நாய்கள் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார். அனந்த் குமார் இவ்வாறு கூறியது போராட்டம் நடத்தியவர்களைத் தான் என்று புதிதாக சர்ச்சை உருவெடுத்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன