தனுஷ்கோடி அரிச்சல் முனையை சுத்தம் செய்ய அதிகாரிகள் முடிவு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இரண்டாவது நாளாக இந்திய கடற்படை சார்பில் சுத்தம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார். இந்திய கடற்படை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி அரிச்சல் முனையை நாளை சுத்தம் செய்ய உள்ளதாக மண்டபம் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!