தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4 வயது குழந்தை கொலை..! வழக்கறிஞரின் காதலி கைது

சென்னை அடுத்த குன்றத்தூரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்து கேட்டு வந்த பெண்ணுடன், வழக்கறிஞருக்கு உண்டான காதலால் நிகழ்ந்த விபரீதம்

குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் . இவருக்கும் மூன்றாம் கட்டளையை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும் 5 வருடங்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் கோசிகா என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.

குழந்தை கோசிகா, தாய் ஜெயந்தியின் பராமரிப்பில் இருந்தாலும் வாரம் இருமுறை தந்தை சரவணன் வீட்டில் குழந்தையை விட்டுச் செல்வது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் வீட்டிற்கு சென்ற கோசிகா, ஞாயிற்றுகிழமை மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தாய் ஜெயந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் முகத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெயந்தி, தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறினார், தமது கணவர் சரவணன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில் சரவணன் வீட்டு பணிப்பெண்ணான ஆஷா என்பவர் குழந்தையை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் இந்த கொலைக்கு பின்னணியில் சொத்துவிவகாரம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

மனைவியை பிரிந்து வசித்து வந்த வழக்கறிஞர் சரவணனுக்கும், அரக்கோணத்தை சேர்ந்த ஆஷாவுக்கு ஏன்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டி சரவணனை சந்திந்த ஆஷாவை தனது வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தி உள்ளார் சரவணன். ஆஷாவுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவரது அழகில் மயங்கிய சரவணன், ஆஷாவை காதலித்துள்ளார். இதற்கிடையே ஆஷா கர்பமானதால் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்த சரவணன் தனது சொத்துக்கள அனைத்தையும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எழுதிவைக்கப்போவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

வழக்கறிஞர் சரவணனின் காதல் விவகாரம் தெரிந்து அவரது தந்தையோ தனது சொத்து எல்லாம் என்றைக்கும் தனது பேத்தி கோசிகாவுக்குத்தான் என்று கூறியுள்ளார். கோசிகா உயிரோடு இருந்தால் தனது குழந்தைக்கு சொத்துக்கள் கிடைக்காது என்று எண்ணிய ஆஷா , சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த குழந்தை கோசிகாவை தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் குழந்தை உடலில் உள்ள ஈரத்தை நன்றாக துடைத்து , புதிய ஆடைகளை அணிவித்து மாடிப்படியில் இருந்து உருட்டி விட்டுள்ளார் கொலையாளி ஆஷா என்றும் அதனால் ஏற்பட்ட காயங்களால் தாய் ஜெயந்தி சந்தேகம் எழுப்பியதால் ஆஷாவின் கொடூர கொலை செயல் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எப்போதும் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் பேசித்தீர்க்கப்பட கூடியவை, அதைவிடுத்து தன்னிடம் சொத்து இருக்கிறது என்ற ஆணவத்தில், மனைவியை பிரிந்து சென்று தவறான உடல் சார்ந்த தேடலில் இறங்கினால், அது எத்தகைய விபரீதத்தை நிகழ்த்தும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன