Advertisement

தண்ணீரின்றி கருகும் நிலையில் நெற்பயிர்கள் – அறுவடைக்கு தயாராகும் நிலையில் சோகம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக்காமல் கருகியுள்ளன. 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக வேண்டிய பயிர்கள் காய்ந்து போனதால் கால்நடைகள் மேய்ந்து வருகின்றன.

மணிமுத்தாறு அணையின் கடைமடைப்பகுதியாக சாத்தான் குளம் சுற்றுவட்டாரத்தில் 30க்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் இதனை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் கடைசியாக வந்தடைய வேண்டிய சாத்தான்குளம் சுற்றுவட்டார பாசனப் பரப்புகளுக்கு போதிய நீர் கிடைக்கவில்லை. அங்குள்ள கோமனேரி கிராமத்தில் 20 நாட்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகிவிடும் என்ற நிலையில், முதிர்ச்சியடையாத நெல்மணிகளுடன் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

கடன்வாங்கி பயிர்செய்துள்ள நிலையில் பயிர்கள் கருகியுள்ளதால் வேறு வழியின்றி தவிப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள். பசுமையாக இருந்த பயிர்கள் நிறம் மாறி கருகத் தொடங்கியுள்ள நிலையில், பயிர்களை கால்நடைகள் மேயும் நிலை உள்ளது. ஓரிரு நாட்களில் தண்ணீர் கிடைக்கவில்லை எனில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள பயிர்கள் முழுவதுமாக கருகிவிடும் என்பதால் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=5yYWuKn2OGI

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன