தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் நெடுந்தீவு அருகே சிறைப்பிடிப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கச்சி மடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த 5 மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி படகுடன் அவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்கள் 5 பேரையும் வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 42 பேரை தீபாவளியை முன்னிட்டு விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், 5 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன