தகாத உறவு இருந்ததால், கணவரை கொன்ற வழக்கில் மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி கவிதாவிற்கும், அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சம்சுதீன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கவிதா, சம்சுதீன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்திலை, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே அழைத்துச் சென்று கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட கவிதா, சம்சுதீன், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன