டெல்லி அருகே 7 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனது மகனை சிபிஐ அதிகாரிகள் சித்ரவதை செய்ததாக தந்தை குற்றச்சாட்டு

டெல்லி அருகே 7வயது மாணவன் கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் சித்ரவதையால், அப்பாவியான தனது மகன் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக அவனது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

குர்கானில் உள்ள ரையான் பள்ளியில் 7 வயது சிறுவன் பிரதியுமான் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், அதே பள்ளியில் படித்த 11ஆம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட மாணவன், கொலை செய்ததையும் அவனது தந்தை முன்பே நடித்துக் காட்டினான். இதையடுத்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அவன், தான் கொலை செய்யவில்லை என்றும், தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும், நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்தான்.

இந்நிலையில், தனது மகனை சி.பி.ஐ. அதிகாரிகள் சித்ரவதை செய்ததாகவும், அதனாலேயே அவன் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சி.பி.ஐ. அதிகாரிகள், தனது கண்முன்னே மகனை கன்னத்தில் அடித்ததாக கூறிய அவர், உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன