Advertisement
Advertisement

டெல்லியில் 35,000 பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி – சூற்றுச்சூழல் மேம்பட்டிருப்பதால் நீதிமன்றம் அனுமதி

டெல்லியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஏர்டெல் டெல்லி மாரதான் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இன்றைய தினம் டெல்லி மாரத்தான் போட்டிகள் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவில் இருப்பதால் மாரத்தான் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரியிருந்தது. எனினும் தற்போது சூற்றுச்சூழல் சற்று மேம்பட்டிருப்பதால் மாரத்தான் போட்டிகளை இன்று நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து டெல்லி மாரத்தான் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன