Advertisement

டெல்லியில் மைக்ரோ வேவ் அவனில் மறைத்து எடுத்துவரப்பட்டு 2 கிலோ தங்கம் பறிமுதல்

டெல்லியில் மைக்ரோ வேவ் அவனில் மறைத்து எடுத்துவரப்பட்டு 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து டெல்லி வந்த இரு பயணிகளின் உடைமைகளை சுங்கத் தடுப்புத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதித்தனர். அதில், மைக்ரோ வேவ் அவனில் இரு டிரான்ஸ்ஃபார்மர் சிலிண்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்க உருளைகள் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சுங்கச் சட்டம் 104-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சனிக்கிழமையன்றும் துபாயில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவரிடம் இருந்து வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 39 லட்சம் ரூபாய் மதிப்பிலாக தங்கத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன