டெல்லியில் நிலவும் கடும் பனிப்புகையால், வரும் டிசம்பரில் பிரதமர் மோடி தொடங்கவிருந்த கெலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் நிலவும் கடும் பனிப்புகையால், வரும் டிசம்பரில் பிரதமர் மோடி தொடங்கவிருந்த கெலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் கெலோ இந்தியா திட்டத்தின் கீழ், டெல்லியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி மெகா விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டெல்லியில் கடும் பனிப்புகை நிலவுகிறது.

இதனால், கெலோ இந்தியா நிகழ்ச்சியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். இதையடுத்து, வரும் ஜனவரியில் கெலோ இந்தியா நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன