Advertisement

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் போதாது என்றும் பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்குமாறும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 புள்ளி 34 அடியாகவும், நீர் இருப்பு 19 புள்ளி 98 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

நீர்திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன