Advertisement

டென்மார்க்கில் பொழுதுபோக்கு பூங்காவில் பத்துலட்சம் மின்விளக்குகள் அலங்காரம்

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் கிறிஸ்துமசை முன்னிட்டு அங்குள்ள திவோலி பொழுதுபோக்குப் பூங்கா பத்துலட்சம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒரே மரத்தில் 3 ஆயிரத்து 250 மின்விளக்குகள் மின்னுவதைப் பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அங்குள்ள பாதைகள், கட்டடங்கள் யாவும் மின்னொளியால் மினுமினுக்கின்றன.

ஆயிரக்கணக்கான கிறிஸ்துமஸ் மரங்களும் நட்சத்திரங்களும் மின்னொளி ஆடைகளை அணிந்து ஜொலிக்கின்றன. கிறிஸ்துமசின் காட்சியுடன் சுவையை கூட்ட ஏலக்காய் மணக்கும் தேநீரும் ஒயினும் பார்வையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன