Advertisement
Advertisement

டெங்கு பாதிப்பு குறித்த உண்மை நிலையை மத்திய குழு வெளியிட வேண்டும் – ஸ்டாலின்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்த உண்மை நிலையை மத்திய குழு வெளிப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வந்த எய்ம்ஸ் மருத்துவ குழு இதுவரை ஏதும் கூறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பஞ்சாயத்து செய்து சேர்த்துவைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே ஓபிஎஸ் டெல்லி சென்றதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன