Advertisement

சேலம், வேலூர் மாவட்டங்களில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

சேலம், அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகளை ஆட்சித்தலைவர் ரோஹிணி ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வீடு, வீடாகச் சென்ற ஆட்சியர் ரோஹினி, சமையலறை, குளியலறை மற்றும் பிற தேவைகளுக்காக தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

நெசவு தொழில் செய்பவர்களின் வீடுகளுக்குச் சென்ற அவர் ஜரிகை போன்ற பொருட்களை ஊற வைக்கும் பாத்திரங்களை அன்றாடம் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பொதுமக்களுக்கு அவர் சில அறிவுரைகளையும் வழங்கினார்.

பின்னர் பாழடைந்த நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டின் பூட்டையும் உடைக்கச் செய்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன