Advertisement
Advertisement

டெங்கு இறப்பை மறைக்கவோ, குறைக்கவோ இல்லை – மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெங்கு இறப்பை அரசு மறைக்கவில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெங்குவால் இந்த ஆண்டு உயிரிழந்த 30 பேரில் 14 பேர் கடந்த சில மாதங்களில் உயிரிழந்தவர்கள் என்றும் டெங்குக் கொசுவை ஒழிக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். டெங்கு கொசுவால் ஏற்படும் உயிரிழப்புக்களை மறைக்கவோ குறைக்கவோ மேற்கு வங்க அரசு முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் குறித்து தனியார் ஆய்வகக் கூடங்கள் பொதுமக்களுக்கு வேண்டுமென்றே பீதி ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை அளித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன