டெங்குவிற்கு சிகிச்சை தர அரசு மருத்துவமனைகள் தயார்: விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகள் கைவிட்டாலும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் தயாராக இருப்பதாக, சுகாரதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். சென்னை ஷெனாய் நகரில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர், இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறும் தமிழகத்தில், காய்ச்சலால் ஒருவர் மரணமடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். தனியார் மருத்துவமனைகள் கைவிட்டாலும், டெங்குவால் பாதிக்கப்பட்டு எந்த சூழலில் வருவோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை தயாராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன