டி.டி.வி தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார் – முதலமைச்சர் பழனிசாமி ஆவேசம்

தாங்கள் வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டதாக கூறி வரும் டி.டி.வி தினகரன் விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்ல இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தங்கச்சாலை பகுதியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துரோகம் செய்தவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா தண்டித்து வருவதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் தினகரனும் ஜெயலலிதா ஆன்மாவால் தண்டிக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீண்ட காலம் கட்சிக்கு உழைத்து பொறுப்புகளுக்கு வந்துள்ள தங்களை கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் பொறுப்புகளை பெற்ற தினகரன நீக்குவது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தி.மு.கவுடன் இணைந்து அ.தி.மு.க அரசை கவிழ்க்க தினகரன் முயற்சித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *