டிரைவர் இல்லாமல் வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பத்துக்கு கூகுள் நிறுவனம் ரூ.6,700 கோடி செலவு

டிரைவர் இல்லாமல் வாகனங்களை இயக்கும் தொழில்நுட்பத்துக்கு கூகுள் நிறுவனம் இதுவரை சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ($1bn) செலவிட்டுள்ளது.

தானோட்டி வாகன பிரிவை, தனி நிறுவனமாக கூகுள் அண்மையில் அறிவித்தது. வேமோ ((Waymo)) என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனம், பல வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை, 20 லட்சம் மைல்களுக்கு போக்குவரத்துள்ள சாலைகளில் சோதனைகளை நடத்தியுள்ளது. டிரைவர் இல்லாத வாகனம் தொடர்பாக, வேமோ மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு இடையே சட்டப்போரும் நடைபெற்ற நிலையில், கூகுள் நிறுவனம் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொகை மென்பொருள் மற்றும் வன்பொருள் உருவாக்கத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *