டிடிவி தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தங்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்புவதாக கூறி வரும் டிடிவி தினகரன், விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தங்கசாலையில் நேற்று நடைபெற்ற அண்ணா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஜெயலலிதா இருக்கும் வரையில், சென்னை பக்கமே, டிடிவி தினகரன் வந்ததில்லை என்றும், அனைவருக்கும் அவர் தான் சீட் கொடுத்தது போலவும், ஆட்சியமைத்தது போலவும் பேசி வருவதாக சாடினார். ஆட்சியை கலைக்கும் டிடிவி தினகரனின் கனவு ஒருநாளும் நிறைவேறாது என்றும், டிடிவி தினகரன் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் சூசகமாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *