Advertisement

டிடிவி தினகரன் மீது அரக்கோணத்தில் 2 காவல் நிலையங்களில் புகார்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசியதாக கூறி டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரக்கோணத்தில் இரண்டு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் பேசிய டிடிவி தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தால், சபாநாயகர் தனபாலை விடப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

சபாநாயகரை டி.டி.வி தினகரன் மிரட்டும தொனியில் பேசியிருந்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை, டிடிவி தினகரன் மரியாதைக் குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திலும் டிடிவி தினகரன் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன