டிடிவி தினகரனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – E.V.K.S.இளங்கோவன்

டிடிவி தினகரனை வெளியில் விட்டு வைக்கக் கூடாது என்றும் அவரை சிறையில் தள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடந்த ஜவஹர் லால் நேருவின் பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், சிறையில் 20 வருடம் இருந்து விட்டு பின்னர் பழிவாங்குவேன் என்று டிடிவி தினகரன் அப்பட்டமாக பேசுவதால் அவரை விட்டு வைக்கக் கூடாது என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன