Advertisement
Advertisement

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சுமார் ஓராண்டாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுத்த புகாரை அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலை தாமதமின்றி நடத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 4 ம் தேதியுடன் தேர்தல் நடத்துவதற்கான காலம் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என எவ்வளவு நாட்களுக்கு தெரிவிப்பீர்கள் என தேர்தல் ஆணையத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளாவது இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என நம்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, சக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிசம்பர் 31-க்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன